2024 ஆம் ஆண்டிற்கான டிசம்பர் மாத ஜாதகம்
ராசி பலன்கள் December டிசம்பர் 2024
December டிசம்பர் 2024 வேலை, கல்வி, குடும்பம், ஆரோக்கியம், வியாபாரம் மற்றும் நிதி நிலைமை குறித்த கோசார பலன்கள்
எங்கள் மாத ஜாதகம் அல்லது ராசி பலன்கள் பகுதியிற்கு வரவேற்கின்றோம், இவை சந்திரராசி அடிப்படையில் உண்டாக்கப்பட்டவை. சூரியன், செவ்வாய், சூக்கிரன், புதன் ஆகிய கிரகங்களின் மாத கோசாரம் இத்திட்டத்தில் அடங்கியுள்ளன. இந்த மாத ராசி பலன்களைப் பார்க்க உங்கள் ராசி படத்தை கிளிக் செய்யவும். ராசி பலன்களை கோசார பலன்கள் என்றும் அழைக்கின்றனர், அதாவது கிரகங்களின் ராசி மாற்றங்கள். சந்திரனிலிருந்து ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு வகை பலன்களை அளிக்கின்றன. கிரகங்கள் நான்காவது வீடு, எட்டாவது வீடு, பன்னிரண்டாவது வீடு ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும்போது தீய பலன்களைத் தருகின்றன. அனைத்து பாப கிரகங்களும் மூன்றாவது, ஆறாம், பதினோராவது வீட்டில் சுப பலன்களைத் தருகின்றன. குறிப்பாக பதினோராவது வீடு லாப ஸ்தானமாகக் கருதப்படுகிறது, இது எங்கள் ஆசைகளை நிறைவேற்றுகிறது மற்றும் முழு வெற்றியை அளிக்கின்றது. பொதுவாக, கோசாரத்தில் ஒரு கிரகம் நான்காவது வீட்டில் சஞ்சாரம் செய்யும்போது அதிக பணிச்சுமை மற்றும் அழுத்தத்தை தருகின்றது. எட்டாவது வீட்டில் சஞ்சாரம் செய்வதால் விபத்துகள், இழப்புகள் மற்றும் திருட்டு ஏற்படுகின்றன, பன்னிரண்டாவது வீட்டில் சஞ்சாரம் செய்யும் கிரகங்கள் ஆரோக்கியப் பிரச்சினைகள் மற்றும் நிதி இழப்புகளைத் தருகின்றன. நவகிரகங்கள் வெவ்வேறு நிலைகளில் சஞ்சாரம் செய்யும்போது ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு பலன் இருக்கும். சந்திரன் 2 1/4 நாட்களில் ராசி மாற்றம் செய்கிறார். சூரியன், புதன், சூக்கிரன் மாதத்திற்கு ஒரு ராசியில் மாற்றம் செய்கிறார்கள். செவ்வாய் சுமார் 45 நாட்கள் ஒரு ராசியில் மாற்றம் செய்கிறார். குரு ஆண்டிற்கு ஒரு ராசியில் மாற்றம் செய்கிறார். ராகு கேது 18 மாதங்களுக்கு ராசியில் மாற்றம் செய்கிறார்கள். சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு ராசியில் மாற்றம் செய்கிறார்.
டிசம்பர் மாதத்தில் நடக்கும் கிரக சஞ்சாரங்கள் மற்றும் அவற்றின் விளைவுகள்:
டிசம்பர் 2024 மாதத்தில் கிரக நிலைகள் எப்படி இருக்கின்றன என்று தெரிந்து கொள்வோம்!
சூரியன்
ஆரோக்கியத்திற்கும், தன்னம்பிக்கைக்கும் காரகனான சூரியன் ஞாயிற்றுக்கிழமை 15/12/2024 அன்று விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குள் பிரவேசிக்கிறார்.
புதன்
பேச்சுக்கும், கல்விக்கும் காரகனான புதன், வக்ர கதியில் இந்த டிசம்பர் மாதமும் விருச்சிக ராசியில் தனது பயணத்தைத் தொடர்கிறார்.
சுக்கிரன்
காதலுக்கும், ஆடம்பரத்திற்கும் காரகனான சுக்கிரன் திங்கட்கிழமை 02/12/2024 அன்று மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார், மீண்டும் இந்த மாதத்தில் சனிக்கிழமை 28/12/2024 அன்று கும்ப ராசிக்குள் பிரவேசிக்கிறார்.
செவ்வாய்
கோபத்திற்கும், போருக்கும் காரகனான செவ்வாய் இந்த மாதமும் தனது நீச ராசியான கடக ராசியில் தனது பயணத்தைத் தொடர்கிறார். "கடகத்தில் செவ்வாய் கண்டால் கடனும் வரும், கஷ்டமும் வரும்" என்பது பழமொழி.
குரு
ஞானத்திற்கும், வாழ்க்கைக்கும் காரகனான குரு வக்ர கதியில் இந்த மாதமும் ரிஷப ராசியில் தனது சஞ்சாரத்தைத் தொடர்கிறார்.
சனி
கஷ்டத்திற்கும், கர்மாவிற்கும் காரகனான சனி இந்த மாதமும் கும்ப ராசியில் தனது சஞ்சாரத்தைத் தொடர்கிறார். "ஏழரை சனி" நடப்பவர்களுக்கு சற்று கடினமான காலகட்டமாக இருக்கலாம்.
ராகு
மனிதனின் அகங்காரத்திற்கு காரகனான ராகு இந்த மாதமும் மீன ராசியில் தனது பயணத்தைத் தொடர்கிறார்.
கேது
மோட்சத்திற்கும், துக்கத்திற்கும் காரகனான கேது இந்த மாதமும் கன்னி ராசியில் தனது பயணத்தைத் தொடர்கிறார்.
இங்கு தரப்படும் ராசி பலன்கள் உங்கள் சந்திரராசி அடிப்படையில் எழுதப்பட்டவை. இவை மேற்கத்திய முறையில் சூரிய ராசி அடிப்படையில் எழுதப்பட்டவை அல்ல என்பதை கவனிக்கவும். உங்கள் சந்திரராசி என்ன என்பது தெரியாவிட்டால் இந்த இணைப்பை பயன்படுத்தி உங்கள் பிறப்பு விவரங்களைச் சென்று உங்கள் ராசி மற்றும் நட்சத்திரம் தெரிந்துகொள்ளலாம்.
Please Note: All these predictions are based on planetary transits and Moon sign based predictions. These are just indicative only, not personalised predictions.
Free Astrology
Free Vedic Horoscope with predictions
Are you interested in knowing your future and improving it with the help of Vedic Astrology? Here is a free service for you. Get your Vedic birth chart with the information like likes and dislikes, good and bad, along with 100-year future predictions, Yogas, doshas, remedies and many more. Click below to get your free horoscope.
Get your Vedic Horoscope or Janmakundali with detailed predictions in
English,
Hindi,
Marathi,
Telugu,
Bengali,
Gujarati,
Tamil,
Malayalam,
Punjabi,
Kannada,
Russian, and
German.
Click on the desired language name to get your free Vedic horoscope.
Free Daily panchang with day guide
Are you searching for a detailed Panchang or a daily guide with good and bad timings, do's, and don'ts? Our daily Panchang service is just what you need! Get extensive details such as Rahu Kaal, Gulika Kaal, Yamaganda Kaal, Choghadiya times, day divisions, Hora times, Lagna times, and Shubha, Ashubha, and Pushkaramsha times. You will also find information on Tarabalam, Chandrabalam, Ghata day, daily Puja/Havan details, journey guides, and much more.
This Panchang service is offered in 10 languages. Click on the names of the languages below to view the Panchang in your preferred language.
English,
Hindi,
Marathi,
Telugu,
Bengali,
Gujarati,
Tamil,
Malayalam,
Punjabi,
Kannada,
French,
Russian, and
German.
Click on the desired language name to get your free Daily Panchang.